"மகன் சேரனின் துயரத்தில் நானும் பங்கு கொள்கிறேன்" - பாரதிராஜா இரங்கல்

 
tn

இயக்குநர் சேரனின் தந்தை மறைவுக்கு இயக்குநர் பாரதிராஜாவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

tn

இயக்குனரும் நடிகருமான சேரனின் தந்தை பாண்டியன் இன்று அதிகாலை உயிரிழந்தார். மதுரை மாவட்டத்திலுள்ள பழையூர் பட்டியில் உள்ள தனது சொந்த வீட்டில் இன்று காலை அவரது உயிர் பிரிந்தது.  84 வயதான இவர் சினிமா ஆப்ரேட்டராக பணிபுரிந்தவர்.  கடந்த சில தினங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சேரன் தந்தையின் இறுதி சடங்குகள் பழையூர் பட்டியில் இன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  


இந்நிலையில் இயக்குநர் பாரதிராஜா தனது சமூகவலைத்தள பக்கத்தில், 
அன்னையைப் போற்றி
ஆயிரம் திரைப்படங்கள்
நம்மை தாலாட்டிச் சென்றாலும்
தவமாய் தவமிருந்து என்கிற ஒரு காவியத்தை
படைத்து தந்தையர்களுக்கும்
தமிழனுக்கும்
பெருமைச் சேர்த்த
மகா கலைஞன் திரு.சேரன்
தன் தந்தையை இழந்து
வாடுவது மிகுந்த வேதனை
அளிக்கிறது. மகன் சேரனின்
துயரத்தில் நானும் பங்கு கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.