ராயப்புரத்தில் அதிமுகவினர் வழங்கிய காசோலை கூப்பன்
சென்னை ராயபுரத்தில் காசோலை கூப்பன் வழங்கிய அதிமுகவினரை திமுகவினர் கையும் களவுமாக பிடித்தனர்.
தேர்தலுக்குப் பிறகு வெற்றி பெற்றால் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அதிமுகவினர் காசோலை வடிவில் வடிவமைக்கப்பட்ட காசோலை கூப்பன்களை வாக்காளர்களிடம் விநியோகித்தனர். இதனைப் பார்த்த திமுகவினர் கையும் களவுமாக அதிமுகவினரை பிடித்து தேர்தல் பறக்கும் படையினரிடம் ஒப்படைத்தனர். வாக்களார்களை கவர்வதற்கு அதிமுக தேர்தல் அறிக்கையில் ஒவ்வொரு இல்லத்தரசிகளுக்கு வங்கி கணக்கில் 10 ஆயிரம் ரூபாய் போடப்படும் என்று வாக்குறுதி அளித்தனர்.
ராயபுரம் தொகுதிக்கு உட்பட்ட வார்டு 50-ல், தேர்தல் வெற்றிக்குப் பிறகு ரூ. 10,000 வழங்கப்படும் எனக் கூறி, காசோலை வடிவில் வடிவமைக்கப்பட்ட பணக் கூப்பன்களை விநியோகித்தபோது, அதிமுக வார்டு செயலாளர் வாசு கையும் களவுமாகப் பிடிபட்டதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து திமுகவினர் தேர்தல் பறக்கும் படைக்கு தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்ததிற்கு விரைந்து வந்த தேர்தல் பறக்கும் படையினர் அதிமுக நிர்வாகி வாசுவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


