தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வீட்டில் காலணி வீச்சு!

 
tn

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வீட்டில் காலணி வீசப்பட்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராஜ விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். தற்போது கட்சியின் கட்டமைப்புகளை சரிசெய்து வருகிறார். அதற்காக மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள், வியூக வகுப்பாளர்களை நியமித்து வருகிறார். இதன் காரணமாக பனையூரில் உள்ள அக்கட்சியின் அலுவலகம் பரபரப்புடன் காணப்படுகிறது.  தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி மாமல்லபுரத்தில் இன்று நடைபெறவுள்ளது.  2ம் ஆண்டு விழாவையொட்டி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் உரை நிகழ்த்த உள்ளார். தேர்தல் வியூகம், சுற்றுப்பயணம், கூட்டணி உள்ளிட்டவை குறித்து விஜய் உரையாற்றவுள்ளதாக தகவல் வெளீயாகியுள்ளது. 

இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் வீட்டில் காலணி வீசப்பட்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை நீலாங்கரையில் உள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் வீட்டில் காலணி வீசப்பட்டுள்ளது. விஜய் வீட்டில் காலணியை தூக்கி வீசிய இளைஞரை காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் என கூறப்படுகிறது.