தவெக மாநாடு : சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

 
vijay

 விக்கிரவாண்டியில் நாளை தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெறவுள்ளதை ஒட்டி, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  

 தவெக மாநாடு : சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டி அருகே உள்ள  வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நாளை நடைபெறவுள்ளது. இதில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக  மாநாட்டு பாதுகாப்பு பணிகள் குறித்து வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில், விழுப்புரம் சரக டிஐஜி திஷா மிட்டல், எஸ்பி தீபக் ஸ்வாட்ச் உள்ளிட்ட அதிகாரிகள் உயர் மட்ட  ஆலோசனை  நடத்தினர்.  போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  

govt bus
 
அதன்படி, திருச்சி நோக்கி செல்லும் அரசு பேருந்துகள் பேருந்துகள் = திண்டிவனத்தில் இருந்து செஞ்சி வழியாக திருப்பி விடப்படுகின்றன

சென்னையிலிருந்து திருச்சி செல்லும் கனரக வாகனங்கள்  - திண்டிவனத்தில் இருந்து வில்லியனூர் வழியாக விழுப்புரம் செல்லலாம் 

சென்னையிலிருந்து திருச்சி செல்லும் கார்கள் = திண்டிவனத்தில் இருந்து மயிலம், பெரும்பாக்கம் வழியாக விழுப்புரம் செல்லலாம்

திருச்சியில் இருந்து சென்னை வரும் பேருந்து, கார்கள் = செஞ்சி, திண்டிவனம் வழியாக  சென்னை வரலாம்

திருச்சியில் இருந்து வரும் கனரக வாகனங்கள்  = வில்லியனூர், திண்டிவனம் வழியாக சென்னை வரலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.