" பரந்தூரில் சென்னையின் 2வது விமான நிலையம்" - திமுக எம்.பி. கேள்விக்கு மத்திய அரசு பதில்!!

 
tn

சென்னை பரந்தூர் பகுதியில் 2ஆவது விமான நிலையம் அமைய உள்ளதாக விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

domestic flights

சென்னை அருகே புறநகர் பகுதியில் புதிய விமான நிலையம் ஒன்று அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.  இதற்கான இடம் தேர்வு செய்வதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் பன்னூர்  ஆகிய இடங்களை இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தனர். இது குறித்து சில தினங்களுக்கு முன்பு அமைச்சர் தங்கம் தென்னரசு டெல்லியில் விமான போக்குவரத்து துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

tn

இதனால் 2ஆவது  விமான நிலையம் அமையப்போகும் விரைவில் இறுதியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னையின் 2வது விமான நிலையம் பரந்தூரில் அமைகிறது என்று மாநிலங்களவையில் திமுக எம்.பி. கனிமொழி சோமு எழுப்பிய கேள்விக்கு விமான போக்குவரத்து அமைச்சகம் பதிலளித்துள்ளது.  இதன்மூலம் சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க பன்னூர், பரந்தூர் ஆகிய 2 இடங்கள் இறுதி செய்யப்பட்ட நிலையில், பரந்தூர் தேர்வாகியுள்ளது.சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் என்பது தமிழக மக்களின் பெரும் கனவாக உள்ளது .அத்துடன் இது மாநிலத்தின் தொழில் மற்றும் வணிக வளர்ச்சிக்கு மிகவும் அவசியமான ஒன்று என்றும் சொல்லப்படுகிறது. எனவே தற்போது பரந்தூரில் சென்னை இரண்டாவது விமான நிலையம் அமைப்பது உறுதி ஆகிவிட்டது. புதிய விமான நிலையத்திற்காக பரந்தூரில், 4 ஆயிரத்து 791 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது