அனைத்து நாட்களிலும் மக்கள் குடிநீர் வரி செலுத்தலாம் - சென்னை குடிநீர் வாரியம்

 
Chennai Water Board

பொதுமக்கள் குடிநீர் வலி செலுத்துவதற்கு ஏதுவாக சனி, ஞாயிற்றுக்கிழமை என அனைத்து நாட்களிலும் குடிநீர் கட்டண வசூல் மையங்கள் செயல்படும் என சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: குடிநீர் வரி செலுத்துவதற்கு ஏதுவாக அனைத்து பகுதி அலுவலகங்கள், பணிமனை அலுவலகங்கள் மற்றும் தலைமை அலுவலகத்தில் இயங்கும் வசூல் மையங்கள் அனைத்து நாட்களிலும் சனிக்கிழமை மற்றும் மாத இறுதி ஞாயிற்றுக்கிழமையான வருகிற 26-ந்தேதி அன்று காலை 8.30 மணி முதல் மதியம் 1.30 மணிவரை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர்கள் இந்த வசதியினை பயன்படுத்தி மேல்வரி, இணைப்பு துண்டிப்பு மற்றும் ஜப்தி நடவடிக்கைகளை தவிர்த்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் நுகர்வோர்கள் தங்களது நிலுவை தொகையினை இணையதளம் வாயிலாக செலுத்துவதற்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.  

அதன் அடிப்படையில் https://bnc.chennaimetrowater.in/#/public/cus-login என்ற வலைதளத்தை பயன்படுத்தி கிரெடிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் மூலமாகவும் மற்றும் வசூல் மையங்களில் உள்ள கியூஆர் குறியீடு போன்ற பிற கட்டண முறைகளையும் பயன்படுத்தி நுகர்வோர்கள் தங்களின் குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வரி, குடிநீர் கட்டணங்களை செலுத்தலாம். மேலும் பகுதி அலுவலகங்கள், பணிமனை அலுவலகங்கள் மற்றும் தலைமை அலுவலகத்தில் இயங்கும் வசூல் மையங்களில் காசோலை மற்றும் பணமாக வரி செலுத்தலாம். எனவே நுகர்வோர்கள் 31-ந்தேதிக்குள் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய வரிகள் மற்றும் கட்டணங்களை உடனடியாக செலுத்தி சென்னை குடிநீர் வாரியத்தின் வளர்ச்சி பணிகளுக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.