சென்னையில் பயங்கரம்! குத்துச்சண்டை வீரர் ஓட ஓட வெட்டிப் படுகொலை

 
murder

சென்னை திருவல்லிக்கேணியில் குத்துச்சண்டை வீரர் ஓட ஓட வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் குத்துச்சண்டை வீரர் தனுஷ். வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த குத்துச்சண்டை வீரர் தனுஷை மர்ம கும்பல் அரிவாளால் வெட்டியது. தனுஷை வெட்டும்போது தடுக்க முயன்ற அவரது நண்பர் அருணுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இந்த சம்பவத்தில் தனுஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். தலை, உடல் முழுவதும் வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடந்த மகனைக் கண்டு தாய் கதறி அழுதார். 

கஞ்சா போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்ததால் கொலை நடந்துள்ளதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.  படுகொலை குறித்து ஐஸ் ஹவுஸ் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குத்துச்சண்டை வீரர் ஓட ஓட வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.