பேருந்தின் ஓட்டையில் இருந்து பெண் கீழே விழுந்த விவகாரம் - மாநகர போக்குவரத்து கழகம் நடவடிக்கை

 
chennai bus

சென்னையில் மாநகரப் பேருந்தின் பின்பக்க இருக்கை அருகே இருந்த பலகை உடைந்து பெண் பயணி காயமடைந்த விவகாரம் தொடர்பாக ருந்தை பழுது பார்க்கும் பணிமனையை சார்ந்த பணியாளர்கள், பொறுப்பாளர்கள் மீது நிர்வாக ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மாநகர் போக்குவரத்துக் கழகம், பேசின் பாலம் பணிமனையை சார்ந்த பேருந்து (பேருந்து எண்.BBI0706, தடம் எண்.59/E) வள்ளலார் நகரில் இருந்து திருவேற்காடு நோக்கி செல்லும்போது, காலை 9.10 மணியளவில் SKYWALK என்ற இடத்தில் எதிர்பாராதவிதமாக பேருந்தின் பின் இருக்கை அருகில் பொருத்தப்பட்டிருந்த பலகை உடைந்து விழுந்தது. அந்த இடத்தில் அமர்ந்திருந்த பெண் பயணி ஒருவருக்கு காயம் ஏற்பட்டது.

இந்நிகழ்வு தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு, பேருந்தை பழுது பார்க்கும் பேசின் பாலம் பணிமனையை சார்ந்த பணியாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் மீது நிர்வாக ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும், இதுபோன்ற அசம்பாவிதங்கள் ஏற்படாத வண்ணம், அனைத்து பணிமனைகளிலும் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து அலுவலர்களுக்கும் உத்திரவிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.