தனக்கு தானே ஊசி போட்டு கொண்ட சென்னை மாணவன் மரணம்

 
ச்

கொடுங்கையூரில் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் விஷஊசி போட்டுக் கொண்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்.


சென்னை கொடுங்கையூர் மூலக்கடை திருவள்ளுவர் தெரு பகுதியை சேர்ந்தவர் அமுல்ராஜ். இவரது மகன் பால் யூட்டிகேஸ் ஜேசுதாஸ் (20). இவர் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று மதியம் மூன்று முப்பது மணி அளவில் வீட்டின் கழிவறைக்கு சென்றுள்ளார். நீண்ட நேரம் கழிவறைக்குச் சென்றவர், வெளியே வரவில்லை என நினைத்து இவரது தந்தை அமுல்ராஜ் சென்று பார்த்தபோது தனது மகன் மயங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.  

உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்று பார்த்த போது மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கொடுங்கையூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கொடுங்கையூர்  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் உயிரிழந்த பால் யூட்டிகேஸ் ஜேசுதாஸ்  கடந்த இரண்டு வருடங்களாகவே தூக்கம் வராமல் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை பெற்று வந்ததும், நேற்று சோடியம் நைட்ரேட் எனும் வேதிப்பொருளை கடையில் வாங்கி அதனை ஊசி மூலம் செலுத்திக்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதும் தெரியவந்தது. மேலும் அவர் கடைசியாக பாத்ரூமுக்குள் செல்வதற்கு முன்பு தனது தங்கையிடம் அப்பாவை பத்திரமாக பார்த்துக் கொள் என்று கூறி சென்றுள்ளார் என்பதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதன யடுத்து கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.