அறிமுகமே இல்லாத இளம் பருவத்தினர் ஒன்று கூடும் “Strangers meetup”

 
அறிமுகமே இல்லாத இளம் பருவத்தினர் ஒன்று கூடும் “Strangers meetup”

தமிழகத்தில் இளைய தலைமுறையினரை குறிவைத்து சீரழிக்கும் நோக்கத்தில் பரவி வரும் ஸ்ட்ரேஞ்சர்ஸ் மீட்டிங், ஸ்ட்ரேஞ்சர்ஸ் டூர், ஸ்ட்ரேஞ்சர்ஸ் பார்ட்டி என்கிற ஒரு கான்செப்ட் வைத்து புதுவகை கலாச்சாரம் பல இடங்களில் உள்ளது தற்போது சென்னையில் காலூன்ற தொடங்கியுள்ளது.


அறிமுகமே இல்லாத இளம் பருவத்தினர் இந்த கான்செப்ட் மூலம் ஒன்று கூடுவார்கள். சினிமா, ஷாப்பிங், பார்ட்டி, பப்கள், வீடுகள், ரிசார்ட்டுகளில் ஒன்று கூடி பார்ட்டி பண்ணுவார்கள், ட்ரக்கிங் போவார்கள். யாரையும் யாருக்கும் தெரியாது. ஆனால் ஒன்றிணைப்பது "Single to Mingle " ஸ்ட்ரேஞ்சர்ஸ் மீட். இதில் தற்போது இளம்பருவத்தினர் வேகமாக ஈர்க்கப்படுகிறார்கள். யூடியூப், சின்னத்திரை, ட்விட்டரில் வருமான குறைப்பால் வருமானம் இல்லாமல் திரியும் இன்ஃப்ளூயன்ஸர்கள் மூலம் ஒரு கும்பல் இதை ஆர்கனைஸ் செய்கிறது.

மது, போதை, அறிமுகம் இல்லாத ஆண் பெண் தொடர்பு அதன் அடுத்த கட்டம் என நகர்கிறது. பள்ளி, கல்லூரி, நல்ல வேலையில் இருக்கும் இளம் பருவத்தினர் இவர்கள் எளிதாக வலையில் விழுகிறார்கள். சைபர் கிரைம், சட்டம் ஒழுங்கு காவல்துறை கண்காணிக்கிறதா தெரியவில்லை. மேலும் சமுதாய சீரழிவு, போதை, போதையினால் வரும் குற்ற நிகழ்வுகள் இளம் தலைமுறையினரை படுகுழிக்குள் தள்ளும் இந்த கலாச்சாரம் மெல்ல உள்ளே நுழைகிறது. டேட்டிங் ஆப் போல் இதுவும் ஒருவகையான மோசமான கலாச்சாரம் என்பது குறிப்பிடதக்கது.