ஸ்டார் தொகுதியாக உருவெடுத்த தென் சென்னை தொகுதி..! வெல்லப்போவது யார் ?

 
1

தமிழகத்தில் தேர்தல் திருவிழா தொடங்கியுள்ள நிலையில் திமுக, அதிமுக தனது வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளது. இதில் தென் சென்னையை பொறுத்தவரை கடந்த முறை லோக்சபா தேர்தலின் போது திமுக சார்பாக போட்டியிட்ட தமிழச்சி தங்கபாண்டியனுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது. அதிமுக சார்பில் போட்டியிட அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மகன் ஜெயவர்தன்க்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பாஜக சார்பாக தென்சென்னையில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார்.  இதற்காக தான் தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் தமிழிசை சௌந்தரராஜன்.

சென்னையை பொறுத்தவரை 3 மக்களவை தொகுதிகளை பொறுத்தவரை 20 லட்சம் வாக்காளர்களை கொண்ட மிக பெரிய தொகுதியானது தென் சென்னை வேலைவாய்ப்பில் லட்சக்கணக்கானோருக்கு வேலை கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. ஐடி நிறுவனம் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் கொண்ட அதிகம் உள்ள பகுதியாகும். இந்த பகுதியில் வாக்கு வங்கியானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக பார்க்கப்படுகிறது.

தற்போது உள்ள தமிழச்சி தங்கபாடியன் அந்த பகுதியில் உள்ள குறையாக வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் பணி முழுமை அடையாதது, சோழிங்கநல்லூரில் மத்திய அரசு மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்காதது விமர்சிக்கப்படுகிறது. தகவல் தொழில்நுட்ப மையத்தின் கிளஸ்டர் அமைக்கப்படாததால், குறைந்தளவிலான ஐடி நிறுவனங்களே புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. அறிவித்தபடி பல இடங்களில் டாஸ்மாக் கடைகள் அகற்றப்படவில்லை என்பதுடன், தொகுதியில் வளர்ச்சி பணிகள் தொய்வடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இன்னமும் இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு இல்லாமல் இருக்கிறது மக்களின் பல்வேறு கோரிக்கைகளும் நிறைவேறாமல் உள்ளது.

சமீபத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பின் போதும் கூட வேளச்சேரி பகுதியின் நிலவரம் நாம் அனைவரும் அறிந்த ஒன்று அந்த நேரத்தில் அங்குள்ள கட்டிடம் இடிந்து கீழே விழுந்து உயிர் தேசம் ஏற்பட்டது. மேலும், அப்பகுதியில் உள்ள மக்களுக்கு சரியான நிவாரணம் மற்றும் மழை நீரை வெளியேற்றாமல் இருப்பதாக மக்கள் குற்றசாட்டு வைத்தும் திமுக அதற்கு செவி சாய்க்காமல் இருந்தனர். 

இந்த இடத்தில் பாஜக சார்பாக தமிழிசை போட்டியிடுவதால் அவரது பிரச்சாரம் மற்றும் அந்த தொகுதியின் குறைகளை டிஜிட்டல் மூலமாக கையாளுவதால் நிச்சயம் இந்த முறை தென்சென்னையில் பாஜகவுக்கு அதிகப்படியான வெற்றி வாய்ப்பு நிலவுவதாகவும், அதிமுக சார்பில் போட்டியிடும் ஜெயவர்தனன் மக்களுக்கு பிரச்சனையின் போது குரல் கொடுத்தது இல்லையென்றும், தற்போது தான் அவர் இணையத்தில் முகத்தை காட்ட தொடங்கியுள்ளார் என்ற ஒரு விமர்சனமும் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  

இதனால் தென் சென்னை தொகுதி பிரபலங்கள் மோதும் ஸ்டார் தொகுதியாக உருவெடுத்துள்ளது. தென் சென்னையில் வெற்றி பெறுவது தமிழிசையா அல்லது தமிழச்சி தங்க பாண்டியனா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலில் தமிழச்சியும், ஜெயவர்த்தனனும் களம் கண்டனர். அதில் 5,64,000-க்கும் அதிகமான வாக்குகளை பெற்று தமிழ்ச்சி தங்க பாண்டியன் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.