சென்னையில் தொடங்கிய மழை..! இரவெல்லாம் வெளுத்து வாங்குமா?

 
s

சென்னையின்  பல்வேறு பகுதிகளில் பகல் முதலே கருமேகங்கள் சூழ்ந்து இருண்ட வானிலையே நிலவி வந்த நிலையில், தற்போது விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

சென்னை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் மேகங்கள் மெதுவாகத் திரண்டு நகர்ந்து வருகின்றன. இரவு நேரம் செல்லச் செல்ல மேலும் அதிகமான மேகங்கள் ஒன்றுகூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, எழும்பூர், பாரிமுனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை தொடங்கியது. இதேபோல் கோவை மண்டலத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி, தென்காசி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.