சென்னையில் திடீர் கனமழை- தரையிறங்க முடியாமல் தவித்த விமானங்கள்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று பிற்பகலில் திடீரென செய்த கனமழை காரணமாக, சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்க முடியாமல், நடுவானில் தத்தளித்துக் கொண்டு இருக்கின்றன.
பெங்களூர், மும்பையில் இருந்து வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் உட்பட 5 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல், நடுவானில் கத்தாருக்கு. சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டறை அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாக கவனிக்க வருவதோடு, இந்த விமானங்களை பெங்களூருக்கு திருப்பி அனுப்புவதற்கு ஏற்பாடுகள் செய்து கொண்டு இருக்கின்றனர். அதைப்போல் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்களான அகமதாபாத் டெல்லி கண்ணூர் தூத்துக்குடி கோவை சேலம் உள்ளிட்ட 10 விமானங்கள் பலத்த மழை காரணமாக புறப்பட முடியாமல் சென்னை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த விமானங்கள் தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைப்போல் சென்னை புறநகர் பகுதிகளில் திடீரென பெய்து வரும் கனமழை காரணமாக, சென்னை விமான நிலையத்தில் இதுவரையில் 15க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டு பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

