சென்னையில் காலை முதலே பரவலாக மழை!

 
Rain

சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் காலை முதலை பரவலாக மழை பெய்து வருகிறது. 

தென்மேற்கு வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை. நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்த நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் காலை முதலை பரவலாக மழை பெய்து வருகிறது. மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, அடையாறு, அண்ணா சாலை, எழும்பூர், புதுப்பேட்டை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, திருவான்மியூர் உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளில் காலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது