சென்னையில் 3 நாட்களில் 47 செ.மீ. மழை பெய்யக்கூடும்- வானிலை ஆய்வாளர் கணிப்பு

 
rain

சென்னையில் 3 நாட்களில் 47 செ.மீ. மழை பெய்யக்கூடும் என தனியார் வானிலை ஆய்வாளரால் கணிக்கப்பட்டுள்ளது. 

Rain

நாளை, நாளை மறுநாள் சென்னையில் அதிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில்,  சென்னை மெரினா, எழும்பூர், நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, வள்ளுவர் கோட்டம் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்துவருகிறது.


இந்நிலையில் சென்னையில் 3 நாட்களில் 47 செ.மீ. மழை பெய்யக்கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் கணித்துள்ளார். இன்று நள்ளிரவு லேசான மழை பெய்யும் என்றும் நாளை முதல் படிப்படியாக மழை அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. நாளை 4.5 செமீ, நாளை மறுநாள் 26.5 செமீ, 16 ஆம் தேதி 15.5 செமீ மழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.