சென்னையில் சொத்து வரி செலுத்த இன்று கடைசிநாள்!

 
Chennai

சென்னை மாநகராட்சியில் சொத்து வரி, தொழில் வரி செலுத்துவதற்கு இன்று (31.03.25) கடைசி நாள் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சியில் சொத்து வரி, தொழில் வரி செலுத்துவதற்கு இன்று (31.03.25) கடைசி நாள். மாநகராட்சி அலுவலகங்கள், இ-சேவை மையங்கள், இணையதளம் மூலம் சொத்து வரியை செலுத்தலாம். நிகழ் நிதியாண்டு இன்றுடன் முடிவடையவுள்ளதால் நிலுவையில் உள்ள சொத்துவரியை செலுத்த அறிவுரை. நாளை முதல் சொத்துவரி செலுத்துவோருக்கு மாதம் ஒரு சதவிகிதம் அபராதம் வசூலிக்கப்படும். நீண்ட காலமாக சொத்து வரி செலுத்தாதவர்களை கண்டறிந்து அவர்களின் சொத்துகளை ஜப்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.