செயின் பறிப்பு கொள்ளையன் என்கவுண்டர் - காவல் ஆணையர் விளக்கம்

சென்னையில் ஜெயின் பறிப்பு கொள்ளையன் என்கவுண்டர் தொடர்பாக சென்னை காவல் ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது: செயின் பறிப்பு சம்பவத்தில் மூன்றாவது குற்றவாளியை ரயிலில் வைத்து பிடித்தோம்
. செயின் பறிப்பு சம்பவத்தில் பிடிக்கப்பட்ட மூன்று பேரும் ஈரானிய கொள்ளையர்கள். மும்பை, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் வழக்குகள் உள்ளது
. பைக் பறிமுதல் செய்ய ஜாபரை அழைத்து சென்ற போது பைக்கில் இருந்து துப்பாக்கி எடுத்து காவல் துறையினரை தாக்கியதால் என்கவுன்ட்டர்
செய்யப்பட்டது. கொள்ளையர்களிடம் இருந்து 26 சவரன் நகைகள் மீட்கப்பட்டுள்ளது.
சுமார் 100 சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகளை கைது செய்தோம்
. கடந்தாண்டு நடந்த 34 செயின் பறிப்பு சம்பவத்தில் 33 இல் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தற்காப்பு நடவடிக்கையாக என்கவுன்ட்டர் செய்யப்பட்டது.
உடைகளை மாற்றியுள்ளனர், ஆனால் ஷூக்களை மாற்றவில்லை, அதை வைத்து கண்டு பிடித்தோம்
. தேடப்படும் குற்றவாளிகளில் டாப் 3ல் குற்றவாளி ஜாபர் இருந்தார் என கூறினார்.