16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - 63 வயது முதியவர் கைது

 
harrasment

சென்னையில் குடும்ப நண்பர் போல பழகி 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 63 வயது முதியவர் கைது செய்யபட்டார். 

சென்னை புழல் பகுதியில் 16 வயது சிறுமிக்கு உலகநாதன் என்ற 63 வயது முதியவர் ஒருவர் பாலியல் தொல்லை அளித்துள்ளார். குடும்ப நண்பர் போல் பழகி 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். உலகநாதன் அடிக்கடி சிறுமியை வீட்டிற்கு அழைத்து வந்து பாலியல் தொந்தரவு அளித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதுபற்றி வெளியே சொன்னால் உன் தாயைக் கொலை செய்து விடுவேன் என சிறுமியை மிரட்டியுள்ளார். 
இது தொடர்பாக சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 63 வயது முதியவர் உலகநாதன் போக்சோ சட்டத்தில் கைது செய்யபட்டார். இக்குற்றச் செயலில் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி ஜோதிலட்சுமி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.