முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரச்சாரம்- ஆட்டோவில் பயணித்து வாக்குசேகரிப்பு

 
ழ்

சென்னையில் இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் முதலமைச்சர் ஸ்டாலினை பொதுமக்கள் ஆர்வமுடன் வரவேற்றனர். 

Image

சென்னை சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி கண்ணகி நகர் ,எழில் நகர் பகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அரவிந்த் ரமேஷுக்கு ஆதரவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைபயிற்சி மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். முதலமைச்சரை ஸ்டாலினை இந்திய மகளிர் அணி கபடி வீராங்கனை கார்த்திகா மற்றும் அவரது அணியினர் "தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்" என முழக்கங்களை எழுப்பி வரவேற்றனர். அதனை தொடர்ந்து வீதியாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட முதலமைச்சர் ஸ்டாலினை பெண்கள் ஆரத்தழுவி வரவேற்றனர். பொதுமக்கள் பலர் தங்களது குழந்தைகளை அழைத்து வந்து முதலமைச்சர் ஸ்டாலினுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். 

தொடர்ந்து வேளச்சேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஹசன் மெளலானவை ஆதரித்து வேளச்சேரி காந்தி சாலை பகுதியில் வாக்கு சேகரிப்பில் முதலமைச்சர் ஸ்டாலினை மாற்று திறனாளிகள் அவருக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர். இளைஞர்களும் இளம் பெண்களும் முதலமைச்சர் ஸ்டாலின் உடன் ஆர்வமுடன் செல்பி எடுத்துக் கொண்டனர். மேலும் விசிக மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் தங்களது கட்சியின் துண்டை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அணிவித்தனர். கூட்டணி கட்சியின் துண்டை கழுத்தில் அணிந்தவாறு வாக்கு சேகரித்தார். 

இறுதியாக சைதாப்பேட்டை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க ஆட்டோவில் வருகை தந்து முதலமைச்சர் ஸ்டாலின் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். தொடர்ந்து கலைஞர் வளைவு தொடங்கி ஜோன்ஸ் ரோடு சந்திப்பு வரை நடந்து சென்று வாக்கு சேகரித்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நரிக்குறவர்கள் பாசி மணி மாலை அணிவித்து வரவேற்றனர். இதனிடையே கரும்பு ஜூஸ் கடையில் கரும்பு ஜூஸ் குடித்து வரவேற்றனர்.