சென்னை எம்.ஐ.டியில் 46 மாணவர்களுக்கு கொரோனா..

 
MIT

சென்னை குரோம்பேட்டையில் உள்ள  எம்.ஐ.டியில் 46  மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி கல்வி நிறுவனத்தில் மாணவர்களுக்கு தொடர்ச்சியாக சளி மற்றும் காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்துள்ளன. இதனையடுத்து மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  முதல்கட்டமாக 1,417 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில்,  46 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.  இது சக மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Covid Positive
கொரோனா உறுதி செய்யப்பட்ட 46 மாணவர்களின் மாதிரிகளும் ஒமைக்ரான் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. மேலும் கல்லூரியில் கூடுதலாக  மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள மாதிரிகள்  சேகரிக்கப்படு வருகின்றன.  இந்த மாதிரிகளின் பரிசோதனை முடிவுகள் வந்தால் , தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

Covid Positive - MIT
மாணவர்களுக்கு கொரோனா  தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து எம்.ஐ.டி கல்லூரிக்கு  ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, முடிவுகள்  கண்காணிக்கப்பட்டு வருவதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார்.