சென்னை மெட்ரோ ரயில் சேவையில் பாதிப்பு

 
metro

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக  சென்னை மெட்ரோ ரயில் சேவையில் பாதிப்பு  ஏற்பட்டுள்ளது.

metro

மீனம்பாக்கம் - விமான நிலையம் இடையே தொழில்நுட்பக் கோளாறால் நீல வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையம் செல்லும் நீல வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.



விம்கோ நகர்-விமான நிலையம், சென்ட்ரல் - பரங்கிமலை இடையே வழக்கம் போல் ரயில்கள் இயக்கப்படுகிறது. சென்ட்ரலில் இருந்து விமான நிலையம் செல்ல ஆலந்தூரில் பச்சை வழித்தடத்திற்கு மாற மெட்ரோ நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.