மெட்ரோ ரயிலின் கல்லூரி மாணவர்களுக்கான கிரியேட்டிவ் டிசைன் போட்டி!!
“மெட்ரோ இரயிலை பயன்படுத்தவும் - உங்கள் பணத்தையும் நேரத்தையும் சேமிக்கவும்” என்ற கருப்பொருளை மையமாக கொண்டு கல்லூரி மாணவர்களுக்கான கிரியேட்டிவ் டிசைன் போட்டி நடத்தப்படுகிறது.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் கல்லூரி மாணவர்களை ஊக்குவிக்கவும் அவர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் வகையிலும் "மெட்ரோ இரயிலை பயன்படுத்தவும் - உங்கள் பணத்தையும் நேரத்தையும் சேமிக்கவும்"என்ற கருப்பொருளை மையமாக கொண்டு கிரியேட்டிவ் டிசைன் போட்டியை நடத்துகிறது. கல்லூரி மாணவர்கள் சென்னை மெட்ரோ இரயில் சேவைகளைப் பற்றி அறிந்துகொள்ளவும், அவர்களின்ஆக்கப்பூர்வமான வெளிப்பாட்டை ஊக்குவிக்கவும் மற்றும் மேம்படுத்துவதே போட்டியின் நோக்கமாகும். இந்த முயற்சிமாணவர் சமூகம் மத்தியில் சென்னை மெட்ரோ இரயில் சேவை பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கான ஒருபடியாகும்.
“மெட்ரோ இரயிலை பயன்படுத்தவும் - உங்கள் பணத்தையும் நேரத்தையும் சேமிக்கவும்”என்றகருப்பொருளை மையமாக கொண்டு கல்லூரி மாணவர்களுக்கான கிரியேட்டிவ் டிசைன் போட்டி#சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் கல்லூரி மாணவர்களை ஊக்குவிக்கவும் அவர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் வகையிலும் "மெட்ரோ… pic.twitter.com/CwT5xDofcF
— Chennai Metro Rail (@cmrlofficial) January 22, 2024
இது ஒரு வெளிப்படையான போட்டி மற்றும் இதற்கான பதிவு ஆன்லைன் படிவம் மூலம் பதிவு செய்யப்படும். இதற்கான படிவம் தேர்ந்தெடுக்கப்பட்ட பங்கேற்பாளர்களுடன் பகிரப்படும். இந்த போட்டிக்கான பதிவுக் காலம் ஜனவரி23, 2024 முதல் பிப்ரவரி 22, 2024 வரை. • தகுதி: சென்னையில் உள்ள அனைத்து வழக்கமான இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு மட்டுமே. • கருப்பொருள்: "USE CMRL - Save Your Money & Time" • வடிவங்கள்: வீடியோக்கள், அனிமேஷன்கள், ஆடியோ காட்சிகள் அல்லது GIF-கள் (30-60 வினாடிகள்) • பரிசுகள்: 1-வது: ரூ.15,000, 2-வது: ரூ.10,000, 3-வது: ரூ.5,000 • பதிவு: ஜனவரி 23, 2024 முதல் பிப்ரவரி 22, 2024 வரை. ஆன்லைனில் https://forms.gle/oa3qyGG3kmW2vHn16… இணைப்பில் பதிவு செய்யவும் அல்லது சென்னைமெட்ரோ இரயில் நிறுவனத்தின் இணையதளத்தில் QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும். • தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர்கள் உடனான சந்திப்பு கூட்டம்: பிப்ரவரி 29, 2024 (விவரங்கள் - சென்னைமெட்ரோ இரயில் நிறுவனத்தின் இணையதளத்தில்) • சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு: மார்ச் 31, 2024 • வெற்றியாளர்கள் அறிவிப்பு: ஏப்ரல் 14, 2024. மேலும் விவரங்களுக்கு, lmc@cmrl.in என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளவும். (“Creative Design Competition for Students” என்ற தலைப்பில் (Subject) உள்ள மின்னஞ்சல் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும், மேலும் பதில் அனுப்பப்படும்).