சென்னை கடலில் மெட்ரோ சேவை..!!
Aug 13, 2026, 10:48 IST1786598339825
சென்னையில் பஸ், ரயில், விமானம், கப்பல் என 4 வகையான போக்குவரத்து சாதனங்கள் செயல்பட்டு வருகிறது. அதேசமயம் சென்னைக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இப்படியான நிலையில் சென்னையில் வாட்டர் மெட்ரோ திட்டம் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சாத்தியக்கூறு மற்றும் திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதற்கான இ-டெண்டர் விடப்பட்டுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க பக்கிங்காம் கால்வாய் வழியாக இச்சேவை திட்டமிடப்பட்டுள்ள நிலையில் சென்னை எண்ணூர் முதல் மாமல்லபுரம் வரையிலான 53 கிலோ மீட்டர் தூரத்துக்கு அதிநவீன படகுப் போக்குவரத்து அமைக்க திட்டமிட்டப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக நேப்பியர் பாலம் முதல் கோவளம் வரை படகுகளை இயக்க ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

