சென்னை மெட்ரோ ரயில் சேவை - புறநகர் பறக்கும் ரயில் சேவை விரைவில் இணைப்பு

 
metro

சென்னை மெட்ரோ ரயில் சேவை - புறநகர் பறக்கும் ரயில் சேவை விரைவில் இணைக்கப்படுகிறது.

metro

மெட்ரோ ரயில் புறநகர் மின்சார ரயில் மற்றும் பறக்கும் ரயில் சேவைகளை இணைத்து பரங்கி மலையில் புதிய ரயில் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.  சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில் சேவை இயக்கப்பட்டு வரும் நிலையில் சென்னை கடற்கரை - வேளச்சேரி வரை பறக்கும் ரயில் சேவை இயக்கப்படுகிறது.  இந்த ரயில் சேவையை பயணிகள் வெகுவாக பயன்படுத்தி வருகின்றனர்.  சென்னை கடற்கரை - வேளச்சேரி வழித்தட பறக்கும் ரயில் சேவை பரங்கிமலை வரை 5 கிலோ மீட்டருக்கு நீட்டிக்கும் பணி கடந்த 2008 ஆம் ஆண்டு  495 கோடி செலவில் தொடங்கப்பட்டது. தற்போது இதன் பணிகள் முடிவடைந்துள்ளன.

metro

இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் சேவை - புறநகர் பறக்கும் ரயில் சேவை விரைவில் இணைக்கப்படுகிறது. ரயில் சேவை இணைப்புக்கான வரைவு புரிந்துணர்வு ஒப்பந்தம் ரயில்வே வாரியத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சென்னை புறநகர் பறக்கும் ரயில் நிலையங்களை மறு சீரமைப்பு செய்து மெட்ரோ ரயில் நிலையங்கள் போல் மாற்ற சிஎம்டிஏ முடிவு எடுத்துள்ளது.