சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தி அதிக முறை பயணம் - பரிசு வழங்கிய மெட்ரோ நிறுவனம்!

 
tn

சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தி அதிக முறை பயணம் செய்த மெட்ரோ ரயில் பயணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
 
மெட்ரோ ரயில் பயணிகளின் அனுபவங்களை மேம்படுத்துவதற்கும், பல்வேறு முறைகளில் தடையற்ற பயணத்தை எளிதாக்குவதற்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்  பாரத ஸ்டேட் வங்கியின் சிங்கார சென்னை  அட்டையோடு (NCMC) சராசரி நிலைக் கட்டணத்தை ஒருங்கிணைத்தது. தேசிய பொது இயக்க அட்டை கட்டண விகிதத்தை ஏற்றுக்கொள்வதை ஊக்குவிக்கவும், பயணிகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கவும், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பாரத ஸ்டேட் வங்கி நிதி உதவியுடன் ஒரு மெகா பரிசு திட்டத்தை அறிவித்தது.ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் 2024 இல் சிங்கார சென்னை அட்டையை அதிக முறை பயன்படுத்தி பயணம் செய்த மெட்ரோ ரயில் பயணிகளில் தலா 40 பயனர்களை அடையாளம் கண்டு வெகுமதி அளிப்பதை நோக்கமாகக் கொண்டது இந்த முயற்சி.



 
சென்னை திரு.வி.க.பூங்கா, செனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இன்று மாலை நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், டிசம்பர் 15 முதல் ஜனவரி 14 வரை அதிகமுறை பயணம் செய்த 40 பயணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.  பரிசுகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் திரு மு.அ. சித்திக், இ.ஆ.ப., வழங்கினார். இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் (அமைப்புகள் மற்றும் இயக்கம்). திரு. ராஜேஷ் சதுர்வேதி, பாரத ஸ்டேட் வங்கியின் துணைப் பொது மேலாளர் (பி&ஓ), திரு. பெனுதர் பர்ஹி, மண்டல மேலாளர், பாரத ஸ்டேட் வங்கி., திரு. D.C. அஸ்வத் துரை செல்வம், மார்க் மெட்ரோ இயக்குநர் திரு. ஆனந்த் கிருஷ்ணன் மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.