5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

 
rain

சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது அறிக்கை 

இன்று மற்றும் நாளை நீலகிரி, கோவை, தேனி, ஈரோடு மற்றும் திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

தமிழகத்தில் இன்று முதல் வரும் மே 25ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் மே 22ம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வே ண்டாம். 

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.