முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடம் மலர்களால் அலங்கரிப்பு!
ஆங்கில புத்தாண்டை ஒட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில புத்தாண்டு உலகம் முழுவதும் வாழும் மக்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்தியா உள்ளிட்ட நாடுகளில் புத்தாண்டு பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாட்டு வருகிறது. நாடு முழுவதும் மக்கள் உற்சாகத்துடன் புத்தாண்டை வரவேற்றனர். புத்தாடை உடுத்தியும், பட்டாசுகளை வெடித்தும், வாழ்த்துக்களை பறிமாறியும் புத்தாண்டை கொண்டாடி மகிழ்கின்றனர். இதேபோல் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஆங்கில புத்தாண்டை ஒட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள கருணாநிதி நினைவிடத்தில் வெற்றி பயணம் தொடரும் என் குறிப்பிடப்பட்டுள்ளது.