சென்னை மெரினா கடலில் 2 இளம்பெண்கள் தற்கொலை முயற்சி

 
merina

சென்னை மெரினா கடலில் இரண்டு இளம்பெண்கள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை மெரினா கடற்கரையில் இன்று காலை இரண்டு இளம்பெண்கள் ஒன்றாக கடலில் இறங்கியுள்ளனர். இதனை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் கவனித்துக்கொண்டிருந்தனர். இந்த நிலையில், அந்த இரண்டு இளம்பெண்களும் கடலுக்கு உள்ளே செல்ல முயன்றுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவலர்கள் அந்த இரண்டு பெண்களையும் உள்ளே சென்று மீட்டனர். 

விசாரணையில் இளம்பெண்கள் இருவரும் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இளம்பெண்களின் தாய், தந்தை கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற முடிவு செய்துள்ளனர். தாயும், தந்தையும் பிரிவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் இரண்டு பெண்களும் கடலில் குதித்து தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தது தெரியவந்துள்ளது.