“3 மணி நேரம் உக்காந்து படம் பாக்க முடியுது.. மக்கள் பிரச்சனையை பேசுனா 'Bore' அடிக்குதா?”- மேயர் பிரியா
பருவ மழையின் தீவிர அபாயங்களை அலட்சியப்படுத்தியும், மாநகராட்சி பிரதிநிதிகளின் மக்கள் நலப் பணிகளை முடக்கும் தவெக அரசின் நிர்வாகச் சீர்கேட்டையும் கண்டித்து இன்று (அக்.15) திமுக சார்பில் சென்னையில் நடைபெறும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை தி.மு.க ஆர்ப்பாட்டத்தில் பேசிய சென்னை மேயர் பிரியா, “சென்னையில் நேற்று (அக்.14) அரசு சார்பில் நடைபெற்ற கூட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர் என்கிற முறையில் மக்கள் பணி குறித்து சேகர் பாபு அவர்கள் பேசும்போது, Bore அடிக்கிறது என்கிறார் இராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் விஜய் தாமு. எப்படி மக்கள் குறித்து பேசுவதை Bore அடிக்கிறது என விமர்சிக்க முடியும்? இது என்ன திரைப்படமா விசில் அடித்து ஆரவாரம் செய்வதற்கு? 3 மணி நேரம் உக்காந்து படம் பாக்க முடியுது.. மக்கள் பிரச்சனையை பேசுனா 'Bore' அடிக்குதா?
தி.மு.க ஆட்சியில் சென்னையை மேம்படுத்துவதற்காக மட்டும் ரூ.500 கோடி நிதி வழங்கினார் அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஆனால், தற்போது மாமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியைக்கூட விடுவிக்காமல் வஞ்சித்து வருகிறது த.வெ.க அரசு. தி.மு.க ஆட்சியில் சென்னையை மேம்படுத்துவதற்காக மட்டும் ரூ.500 கோடி நிதி வழங்கினார் அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஆனால், தற்போது மாமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியைக்கூட விடுவிக்காமல் வஞ்சித்து வருகிறது த.வெ.க அரசு. சென்னையின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக தி.மு.க ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட ரூ.700 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை த.வெ.க அரசு ரத்து செய்துள்ளது” என்றார்.

