“உதய் அண்ணா சட்டரீதியாக எதிர்கொண்டு வெளியே வருவார்”- மேயர் பிரியா

 
s

சென்னை ஒட்டேரியில் எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து மேயர் பிரியா உள்ளிட்ட திமுகவினர் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மேயர் பிரியா, “திமுக தொண்டர்கள் மீது லத்தி சார்ஜ் செய்யும் அளவிற்கு நாங்கள் என்ன தீவிரவாதியா? தியேட்டருக்கு சென்று ஜனநாயகன் படம் பார்த்து அழுகிறார்கள். ஆனால் இன்று ரத்தம் வரும் அளவுக்கு போலீசை வைத்து அடித்திருக்கிறார்கள். இதுதான் ஜனநாயகமா? போலீஸ் கையில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் செய்வீர்களா? இந்த அராஜகத்திற்கு அஞ்சமாட்டோம். பல தவறுகளை இவர்களது கட்சியினர் செய்யும்போது தவறு செய்யாத ஒருவரை கைது செய்ததை கண்டிக்கிறேன் கைதுக்கு எல்லாம் பயப்படுகிறவர்கள் திமுகவினர் கிடையாது.. உதய் அண்ணா சட்டரீதியாக எதிர்கொண்டு வெளியே வருவார். இந்த அராஜக அரசியலை கண்டு ஒருபோதும் நாங்கள் அஞ்ச மாட்டோம்” என்றார்.