’தற்குறி கூட்டம், கவர்ச்சி கூட்டம்..’ எல்லாத்துக்கும் திமுகதான் காரணம்னு சொல்றதுக்கு, நீங்க எதுக்கு ஆட்சில இருக்கீங்க?- மேயர் பிரியா

 
’தற்குறி கூட்டம், கவர்ச்சி கூட்டம்..’ எல்லாத்துக்கும் திமுகதான் காரணம்னு சொல்றதுக்கு, நீங்க எதுக்கு ஆட்சில இருக்கீங்க?- மேயர் பிரியா

இன்றைக்கு அமைச்சர்களாக இருப்பவர்கள் ரீல்ஸ் போட்டு முதலீடுகளை அழைக்கிறார்கள் என சென்னை மேயர் பிரியா கூறியுள்ளார்.

பெரம்பூர் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பேசிய மேயர் பிரியா, “தமிழகத்தில் இன்று பொய்யான வாக்குறுதி கொடுத்த ஒரு கூட்டம் ஆட்சிக்கு வந்திருக்காங்க... அவர்கள்தான் இப்போது ஆட்சியில் இருக்கிறார்கள் என்பது ்தெரியாமல், இன்றைக்கு தி.மு.க.வை குறை சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்... தி.மு.க.வை குறை சொல்வதற்கு நீங்கள் எதற்கு ஆட்சியில் இருக்கிறீர்கள்? இன்றைக்கு அமைச்சர்களாக இருப்பவர்கள் ரீல்ஸ் போட்டு முதலீடுகளை அழைக்கிறார்கள். அந்த ரீல்ஸ் எத்தனை பேரை ஈர்க்கும் என தெரியவில்லை. ரீல்ஸ்க்கும் ரியாலிட்டிக்கும் வித்தியாசம் தெரியாமல் தமிழக அரசை எடுத்துச் செல்கின்றனர்.

இன்றைக்கு போலியான வாக்குறுதிகளை கொடுத்து ஒரு கூட்டம் ஆட்சிக்கு வந்திருக்கிறது. கவர்ச்சி அரசியல் என்று சொன்னால் கோபம் வருகிறது. கவர்ச்சி அரசியல் செய்யாமல் களப்பணி செய்தா ஆட்சிக்கு வந்தீர்கள்? ஆட்சியை அமைத்துவிட்டு, அமைச்சர் பதவிகளையும் வைத்துக்கொண்டு இன்னமும் திமுக ஆட்சியைதான் குறை சொல்கிறார்கள். ஒரு content trend பண்ற Virtual warriors உங்களுக்கு மண்டைல எதாவது இருக்குதா? ஒரு கண்டெண்ட் போடுறீங்க... போடுற கண்டெண்ட்டுல எது உண்மை? எது பொய் என பார்ப்பது கிடையாது. இது ஒன்றும் திரையில் ஓடுகிற படம் கிடையாது. இது தமிழ்நாடு, ஒரு மக்களின் வாழ்வாதாரம்... விஜய் கார்ல வர்றப்பயாவது ஸ்கிரிப்ட் பேப்பரை இன்னும் 5 தடவை படிச்சிட்டு வந்துருக்கலாம். மதிப்பிற்குரிய ஆதவ் அர்ஜுனா பேசினார், நாங்கள் இதை செய்து விடுவோம், அதை செய்துவிடுவோம் என... எதை வேண்டுமானாலும் செய்யுங்கள். திமுககாரனை என்றைக்கும் உங்களால் அசைக்க முடியாது! என்றைக்கு இருந்தாலும் கருப்பு சிவப்பு கொடி தமிழ்நாட்டில் பறக்கத்தான் செய்யும் முதலில் உங்கள் விர்ச்சுவல் வாரியர்ஸையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் களப்பணி ஆற்ற சொல்லுங்கள்!” என விமர்சித்தார்.