#BREAKING சென்னை மேயர் பிரியா காவல்துறையில் புகார்

 
s

சமூக வலைதளங்களில் தன்னைப் பற்றி ஆபாசமாக கருத்துகளை பரப்பியவர்கள் மீது நடவடிக்கைக்கோரி மேயர் பிரியா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

Q

திமுக எம்பி கனிமொழி, மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில், திமுக கவுன்சிலர் சுதா தீனதயாளன் முதல்வர் விஜயை ஒருமையிலும் தரக்குறைவாகவும் பேசி இருந்தார். அப்போது கனிமொழி அமைதியாக அமர்ந்து இருப்பதும், பிரியா சிரித்தவாறு கேட்டு கொண்டு இருந்த வீடியோ இணையத்தில் வெளியானது. இதற்கு தவெக அமைச்சர்கள், கட்சியினர் திமுக கட்சி தலைவர் ஸ்டாலின், திமுக எம்பி கனிமொழி ஆகியோரை கடுமையாக விமர்சித்து கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் தன்னைப் பற்றி ஆபாசமாக கருத்துகளை பரப்பியவர்கள் மீது நடவடிக்கைக்கோரி மேயர் பிரியா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். பொதுவாழ்வுக்கு வர விரும்பும் இளம் பெண்கள் மற்றும் பட்டியல் சமூக பெண்களுக்கு விடப்பட்ட அச்சுறுத்தல் எனவும் அவர் தன்னுடைய புகாரில் குறிப்பிட்டுள்ளார்.