சொத்து விவரங்களைத் தாக்கல் செய்யாத சென்னை மேயர் பிரியா!

 
Priya

சென்னை மேயர், துணை மேயர் உட்பட 75% கவுன்சிலர்கள் சட்டப்படி தங்களது சொத்து விவரங்களை இன்னும் தாக்கல் செய்யவில்லை. 


1973ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி விதிகளின்படி, மேயர், துணை மேயர் உட்பட அனைவரும் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். கவுன்சிலர்கள் மட்டுமின்றி, அவர்களது குடும்பத்தினரும் தங்களது சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்ற விதி உள்ளது. அசையும், அசையா சொத்துகள், குத்தகை/ அடமானத்தில் உள்ள சொத்துகள், அவை எவ்வாரு பெறபட்டன என்ற விவரங்களை அறிவிக்க வேண்டும்.

இந்நிலையில் சென்னையில் உள்ள 200 கவுன்சிலர்களில் வெறும் 43 பேர் மட்டுமே தங்களது சொத்துகள், கடன்கள் குறித்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் 8 மாதங்களில் முடிவடைய உள்ள நிலையில், பிரியா சென்னை மேயர், துணை மேயர் உட்பட 75% கவுன்சிலர்கள் சட்டப்படி தங்களது சொத்து விவரங்களை இன்னும் தாக்கல் செய்யவில்லை. என சொத்து விவரங்கள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரியவந்துள்ளது.