சென்னையில் 5 நிமிடம் குடிநீர் இடைவேளை தொடக்கம் - மேயர் பிரியா..!
Oct 14, 2025, 13:34 IST1760429080889
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மேயர் பிரியா,
சென்னை மாநகராட்சியில் பள்ளிகளுக்கு ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர்கள் தண்ணீர் அருந்துவதற்கு 5 நிமிஷம் குடிநீர் இடைவேளை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் மாணவர்கள் குறிப்பாக மாணவிகள் நீர் இழப்பால் சோர்வடைவதை தடுப்பதற்காக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இந்த திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதில், முதல் கட்டமாக 1,000 மாணவர்களுக்கு மேல் பயிலும், சுமார் 16 பள்ளிகளில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து 500 மாணவர்களுக்கு மேல் பயிலும் 35 பள்ளிகள் கண்டறியப்பட்டு இந்தத் திட்டம் தொடங்கி வைக்கப்பட உள்ளது. இதே போல, படிப்படியாக அனைத்து பள்ளிகளிலும் குடிநீர் இடைவேளை திட்டம் தொடங்கி வைக்கப்படும் என்றார்.


