சென்னையில் பயங்கரம்! எரிந்த நிலையில் பெண் மருத்துவர் சடலமாக மீட்பு

 
Murder

சென்னை பல்லாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் எரிந்த நிலையில் பெண் மருத்துவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை பல்லாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று தீயை அணிக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தின் போது வீட்டில் இருந்து பெண் ஒருவர் எரிந்த சடலமாக மீட்கப்பட்டார். சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
சடலமாக மீட்கப்பட்டவர் எழும்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையின் பல் மருத்துவராக பணியாற்றி வரும் தனலட்சுமி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏசி வெடித்ததால் விபத்து ஏற்பட்டதா? அல்லது தீ வைத்து கொண்டு தற்கொலை செய்து கொண்டார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.