வெடிகுண்டு மிரட்டல் போலி - சென்னை கூடுதல் காவல் ஆணையர் பேட்டி

 
join comissioner

சென்னையில் 13 தனியார் பள்ளிகளில் வெடிகுண்டு வைத்துள்ளதாக வந்துள்ள மிரட்டல் போலி என கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா விளக்கம் அளித்துள்ளார். 

சென்னையில் உள்ள 10க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அண்ணாநகர், முகப்பேர், பாரிமுனை, ஓட்டேரி, கோபாலபுரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த பெற்றோர் பள்ளிகளில் திரண்டதால் பதற்றம் அதிகரித்தது. இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. 

இந்த நிலையில், தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னையில் 13 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது; பள்ளிகளில் சோதனை நடத்தப்பட்டதில் சந்தேகப்படும்படியான பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஒரே இமெயில் ID மூலம் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் புரளி போல் உள்ளது. பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என கூறினார்.