நாளை தொடங்குகிறது சென்னை சர்வதேச திரைப்பட விழா- பாட்ஷா திரையிடப்படுகிறது
சென்னை இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் சார்ப்பில் 23வது சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 11 முதல் 18ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ள படங்கள் அனைத்தும் சென்னை பிவிஆர் சத்யம், ஐநாக்ஸ் திரையரங்குகளில் மட்டும் திரையிடப்படுகிறது. இதற்கான தொடக்க விழா நாளை மாலை 6 மணிக்கு சத்யம் திரையரங்கில் நடைபெறுகிறது. தொடக்க விழாவில் தாரிக் சலேவின் (ஈகிள்ஸ் ஆப் தி ரிபப்ளிக்) படம் திரையிடப்படுகிறது. இறுதி நாளான 18ஆம் தேதி மார்செல் பரேனாவின் EL 470 படம் திரையிடப்படுகிறதமொத்தம் 51 நாடுகளிலிருந்து 122 படங்கள் திரையிடப்படுகின்றன. இதில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 14 படங்கள், கேன்ஸ் விழாவில் விருதுபெற்ற 6 திரைப்படங்கள், பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் வெற்றிபெற்ற 3 திரைப்படங்களும் அடங்கும்.
மேலும் முதல் முறையாக உலக சினிமா பிரிவில் செயின்ட் ஹெலினா, ஜார்ஜியா, பின்லாந்து, பிலிப்பைன்ஸ், ஜோர்டான், மியான்மர், நேபாளம் மற்றும் மாண்டினிக்ரோவிலிருந்து திரைப்படங்கள் திரையிடப்படுகின்றது. இந்திய பனோரமா பிரிவில் பீகாரில் இருந்து தேர்வு செய்யப்பட்ட போஜ்புரி மொழி திரைப்படம் திரையிடப்படுகிறது. இந்த திரைப்பட விழாவில் 12 தமிழ் படங்கள் திரையிடப்படவுள்ளன.
1. 3 BHK
2. அலங்கு
3. பிடிமண்
4. காதல் என்பது பொதுவுடமை.
5 . மாமன்
6. மாயக்கூத்து.
7. மெட்ராஸ் மேட்னி.
8. மருதம்.
9. ஒன்ஸ் அப்போன் அ டைம் இன் மெட்ராஸ்.
10. பறந்து போ.
11. டூரிஸ்ட் ஃபேமிலி.
12. வேம்பு ஆகிய 12 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளது.
மேலும் எம்.ஜி.ஆர் திரைப்பட மற்றும் தொலைக் காட்சித் தொழில் நுட்ப மாணவர்களின் 6 குறும்படங்களும் திரையிடப்படுகின்றன. அதேபோல் நடிகர் ரஜினிகாந்தின் 50 ஆண்டு காலத்துரை பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் பாட்ஷா திரைப்படமும் திரையிடப்பட உள்ளது.


