காவல்துறை காலிப்பணியிடம் 2021 அறிவிப்பு எப்போது?? தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய ஹைகோர்ட் உத்தரவு..

 
சென்னை உயர் நீதிமன்றம்

தமிழக காவல்துறையில், 2021ஆம் ஆண்டுக்கான காலியிடங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு  காவல் துறையில் காலியாக உள்ள அரசுப் பணியிடங்கள்  ஒவ்வொரு ஆண்டும்  எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் நிரப்பப்பட்டு வருகின்றன.  அதன்படி  2020 ஆம் ஆண்டுகான காலிப்பணியிடங்களுக்கு கடந்த  ஆண்டு தேர்வுகள் நடத்தப்பட்டன. ஆனல் 2021 ஆம் ஆண்டுக்கான காலிப்பணியிட அறிவிப்புகளை இதுவரை தமிழக அரசு வெளியிடவில்லை. இந்தனையடுத்து இந்த விவகாரத்தை   சென்னை உயர்நீதிமன்றம் தாமாக  கையிலெடுத்தது.

தமிழக காவல்துறை

இதனைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்படி காவல்துறையில் காலியாக உள்ள காலிப்பணியிடங்களாஇ நிரப்புவது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. இன்று இந்த  வழக்கை விசாரித்த ஹைகோர்ட் , தமிழக காவல்துறையில் 2021ம் ஆண்டு காலியிடங்கள் குறித்த அறிவிப்பு எப்போது வெளியிடப்படும்? என்று கேள்வி எழுப்பியது.

தமிழக காவல்துறை

மேலும் அறிக்கை தாக்கல் செய்யும்படியும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. விசாரணையின்போது 2019 ஆம் ஆண்டு வரையிலான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு விட்டதாக தமிழக அரசு தெரிவித்தது. மேலும் 2020 ஆம் ஆண்டுக்கான 11,181 பணியிடங்களுக்கு  தேர்வுகள் கடந்த ஆண்டு (2021) நடத்தப்பட்டு விட்டன என்றும், காவல் ஆணையம், மாநில பாதுகாப்பு கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளன எனவும் தமிழக அரசு பதிலளித்திருக்கிறது.