பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு நீதிபதி சரமாரி கேள்வி!

 
court court

புலன் விசாரணை நடந்து வரும் நிலையில் எப்படி தலையிட முடியும்? என பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். 

சேலம் பெரியார் பல்கலைக்கழக எஸ்சி/எஸ்டி  பட்டியலின மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட 2.66 கோடி நிதியில் ஊழல் நடந்திருப்பதாக பாதிக்கப்பட்ட  பல்கலைக்கழக பட்டியலின மாணவர்கள் சாரிபில் சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மோசடி மற்றும் முறைகேடு வழக்கில் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் சேலம் மாநகர போலீஸாரால் கைது செய்யப்பட்டு, மோசடி, கூட்டு சதி, கொலை மிரட்டல், எஸ்சி எஸ்டி வன்கொடுமை சட்டப்பிரிவு ஆகிய 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த நிலையில், நிபந்தனை ஜாமினில் வெளியே உள்ளார்.   

இந்த நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, புலன் விசாரணை நடந்து வரும் நிலையில் எப்படி தலையிட முடியும்? என நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் கேள்வி எழுப்பினார். பணப்பரிமாற்றம் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் எனஎனவும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து தெரிவித்துள்ளார்.