“பிளாஸ்டிக் தடை உத்தரவை அமல்படுத்தியதாக பொய் அறிக்கை”- நீலகிரி ஆட்சியருக்கு ஐகோர்ட் கண்டனம்

 
Highcourt

நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் தடை உத்தரவை அமல்படுத்தியது தொடர்பாக பொய்யான அறிக்கை தாக்கல் செய்ததாக மாவட்ட ஆட்சித் தலைவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை - உதகை மண்டல போக்குவரத்து கழகம் -  apcnewstamil.com

வன மற்றும் மலைவாச தலங்கள் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளின் விசாரணை நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் நடைபெற்றுவருகிறது. வழக்குகள் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது நீலகிரியில் பிளாஸ்டிக் தடை உத்தரவு அமல்படுத்தியது, தானியங்கி குடிநீர் வினியோக மையங்கள் அமைத்தது தொடர்பாக  மாவட்ட ஆட்சியர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அந்த அறிக்கையில், 93 மையங்களும் செயல்பட்டு வருவதாகக் கூறப்பட்டிருந்ததை மறுத்த நீதிபதிகள், இந்த மையங்களும் செயல்படவில்லை எனவும், மாவட்ட ஆட்சித் தலைவர் தவறான அறிக்கையை தாக்கல் செய்துள்ளதாக கண்டனம் தெரிவித்தனர். மேலும் இபாஸ் நடைமுறை முறையாக அமல்படுத்தப்படவில்லை என்றும் வாகனங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் படி உத்தரவிட நேரிடும் எனவும் நீதிபதிகள் எச்சரித்தனர். நீதிமன்ற உத்தரவை மீறி பிளாஸ்டிக் பொருட்களுடன் பேருந்துகள் நீலகிரிக்கு அனுமதிக்கப்படுவதாகவும், எந்த பரிசோதனைகளும் நடத்தப்படுவதில்லை என்றும் தெரிவித்தனர். மாவட்ட ஆட்சித் தலைவர் முறையான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 4 ம் தேதிக்கு தள்ளி வைத்தனர். அன்றைய தினம் விசாரணைக்கு நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் காணொலி மூலம் ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.