தீபாவளி போனஸ் பிடித்தம் - தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

 
BUS

அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் தீபாவளி போனஸில் அனுமதியின்றி பிடித்தம் செய்தது தொடர்பாக தமிழக அரசு மற்றும் போக்குவரத்து கழகங்கள் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் தீபாவளி போனஸில் அனுமதியின்றி பிடித்தம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் தீபாவளி போனஸில் அனுமதியின்றி பிடித்தம் செய்ய தடைவிதிக்க கோரி மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நேதாஜி போக்குவரத்து தொழிலாளர்கள் பாதுகாப்பு தொழிற்சங்கத்தின் பொது செயலாளர் அன்புராஜ் இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

high court

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.ஹேமலதா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது போனஸில் இருந்து பணம் பிடித்தம் செய்யப்படுவதால் தொழிலாளர்கள் பண்டிகைகாக கடன் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறோம் என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு, போக்குவரத்து கழகங்கள் 2 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.