தயாநிதி மாறனின் வெற்றி செல்லும் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
Updated: Mar 7, 2025, 11:19 IST1741326589023

மத்திய சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறனின் வெற்றி செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில் தயாநிதி மாறன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனிடையே, மத்திய சென்னை தொகுதிக்கு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலை செல்லாது என அறிவிக்ககோரி அதே தொகுதியில் போட்டியிட்ட வழக்கறிஞர் எம்.எல்.ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த நிலையில், மத்திய சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறனின் வெற்றி செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தேர்தல் வழக்கை தொடர்ந்து விசாரிக்க எந்த காரணங்களும் இல்லை என கூறி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் வழக்கை தள்ளுபடி செய்தார்.