மாணவி பாலியல் வன்கொடுமை - தாமாக முன் வந்து சென்னை உயர்நீதிமன்றம் வழக்குப்பதிவு
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக தாமாக முன் வந்து சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு பதிவு செய்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஞானசேகர் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் துரதிர்ஷ்டவசமான நிகழ்வு எனவும், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் உயர்க்கல்வித்துறை அமைச்சர் செழியன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக தாமாக முன் வந்து சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு பதிவு செய்துள்ளது. பெண் வழக்கறிஞர் வரலட்சுமி எழுதிய கடிதத்தின் அடிப்படையில் தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக உள்துறை செயலாளர், டி.ஜி.பி., மாநகர காவல் ஆணையர் பிற்பகல் 2.15 மணிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர், கோட்டூர்புரம் ஆய்வாளர் ஆகியோர் பதிலளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.