பறவை காய்ச்சல் எதிரொலி- மூடப்பட்டது கிண்டி சிறுவர் பூங்கா
Mar 20, 2026, 21:45 IST1774023310000
பறவை காய்ச்சல் பரவிவருவதால் சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்கா மூடப்படுகிறது.

சென்னை, கிண்டி சிறுவர் பூங்காவில் ஈரநில பறவைகளுக்கு பறவை காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கிண்டி சிறுவர் பூங்காவில் 20க்கும் மேற்பட்ட பறவைகள் உயிரிழந்தன. குறிப்பாக கரண்டிவாயன், கூழைக்கடா, செங்கால் நாரை உள்ளிட்ட நாரைகள், கொக்குகள் உயிரிழந்தன. பறவை காய்ச்சல் பரவிவருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்கா மூடப்படுகிறது. அடுத்த அறிவிப்பு வரும்வரை பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

