சென்னை கிண்டி சிறுவர் பூங்கா இன்று மூடல்!!

 
tn

செஸ் ஒலிம்பியாட் போட்டி காரணமாக சென்னை கிண்டி சிறுவர் பூங்கா இன்று மூடப்பட்டுள்ளது. 

vandalur zoo

சர்வதேச செஸ் ஒலிம்பியாட்  போட்டி தொடக்க விழாவான இன்று வண்டலூர் உயிரியல் பூங்கா,  கிண்டி சிறுவர் பூங்கா ஆகியவற்றிற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  மாமல்லபுரத்தில் 44வது ஒலிம்பியாட் போட்டி இன்று நடைபெற உள்ளது. இப்போட்டியை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.  இதன் காரணமாக சென்னை , செங்கல்பட்டு ,திருவள்ளூர் ,காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  இதன் காரணமாக வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்கா மற்றும் கிண்டியில் உள்ள சிறுவர் பூங்கா ஆகியவற்றிற்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கு பதிலாக ஆகஸ்ட் 2ம் தேதி பூங்காக்கள் செயல்படும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. 

Chess Olympiad

முன்னதாக இந்தியா சார்பில் பங்கேற்கும் 3-வது அணி அறிவிக்கப்பட்டுள்ள  தமிழகத்தைச் சேர்ந்த கார்த்திகேயன், சேதுராமன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதன்மூலம் செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்கும் தமிழக வீரர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.