நவ.5 முதல் சென்னை கிராண்ட் மாஸ்டர் போட்டிகள்
தமிழ்நாடு அரசும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் இணைந்து இரண்டாம் ஆண்டு சென்னை கிராண்ட் மாஸ்டர் போட்டி வரும் 5ம் தேதி சென்னை கூட்டுறத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற உள்ளது.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்யமிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி மற்றும் சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் தொடர் இயக்குனர் ஸ்ரீநாத் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத் ரெட்டி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் சர்வதேச மற்றும் இந்தியா கிராண்ட் மாஸ்டர்கள் கலந்துகொள்ளும் 2வது சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நவம்பர் 5 முதல் 11 வரை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடத்தப்படுகிறது. கடந்தாண்டு சென்னையில் நடந்த போட்டி மிகப்பெரிய வெற்றியை தந்தது. கிராண்ட் மாஸ்டர் மற்றும் கேண்டிடேட் என இருப்பரிவுகளில் நடத்தப்படும் போட்டியில் மொத்த பரிசு தொகையாக 70 லட்சம் வழங்கப்பட உள்ளது ல்.அதில் கிரேண்ட் மாஸ்டர் போட்டியில் முதல் பரிசு பெறுவோருக்கு 15 லட்சமும், கேண்டிடேட் போட்டியில் முதல் பரிசு பெறுபவருக்கு 6 லட்சமும் பரிசாக வழங்கப்பட உள்ளது, வரும் 4ஆம் தேதி போட்டிக்கான தொடக்க விழா நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 1000 பேர் அமர்ந்து பார்க்கும்படி உள்ள கூட்டரங்கில் போட்டி நடைபெறவுள்ளது. இதில் 500 இருக்கைகள் பல செஸ் பயிற்சி மையங்களில் இருந்து வருங்கால வீரர்கள் வருவார்கள். மீதமுள்ள 500 இருக்கைகளில் மக்கள் அமர்ந்து போட்டியை பார்க்கலாமெனவும், அதிகளவு கூட்டத்தை தவிர்க்க அதிகபட்சமாக ரூ.100 கட்டணமாக வசூலிக்க முடிவு செய்துள்ளதாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் மேகநாதரெட்டி தெரிவித்தார்.


