தங்கம் விலை மீண்டும் குறைவு! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,600 குறைந்தது

 
gold

ஆபரண தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,600 குறைந்துள்ளது.

Gold

உலகளவில் நிச்சயமற்ற பொருளாதார சூழல் நிலவி வரும் நிலையில், முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக பார்ப்பது தங்கத்தை மட்டும் தான். அதனாலேயே உலக சந்தையில் தங்கத்தின் மவுசு எப்போதும் குறைவதில்லை. ஈரான் போருக்கு முன்பு வரை தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்த நிலையில், போர் தொடங்கியது முதலாக சரசரவென குறையத் தொடங்கியது. தற்போது போர் பதற்றம் சற்று ஓய்ந்திருந்தாலும், முதலீட்டாளர்களுக்கு எந்த முதலீட்டின் மீதும் தற்போது நம்பிக்கை இல்லாமல் இருப்பதால் தங்கம் விலையும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. 

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்.29) காலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்துள்ளது. இதனையடுத்து மாலையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.400 குறைந்து, ரூ.1,11,200க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.13,900க்கு விற்பனை செய்யப்படுகிறது.