#BREAKING திடீரென அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை- ரூ.1,280 அதிகரித்தது
Aug 14, 2026, 18:43 IST1786713180399
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து ரூ.1,13,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,280 உயா்ந்து ஒரு சவரன் ரூ.1,13,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.14,200-க்கு விற்பனையாகிறது. காலையில் சவரனுக்கு ரூ.1,440 குறைந்த நிலையில் மாலையில் ரூ.1,280 அதிகரித்தது. வெள்ளி விலை காலையில் கிராமுக்கு ரூ.5 குறைந்த நிலையில் மாலையில் விலை மாற்றமின்றி ரூ.255க்கும் விற்கப்படுகிறது.

