#BREAKING தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,600 உயர்வு
Jan 20, 2026, 16:08 IST1768905514685
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,600 உயர்ந்துள்ளது.

தங்கம் விலை உயர்ந்தது கொண்டே வருகிறது.நடுத்தர மக்கள் வாங்க முடியாத விலைக்குத் தங்கம் போய்விட்டது. கொஞ்சமாவது தங்கம் விலை குறையும் என நினைப்போருக்கு ஏமாற்றத்தையே தங்கம் விலை தொடர்ந்து கொடுத்து வருகிறது.
அந்தவகையில் இன்று காலை சவரன் ரூ.1,280 உயர்ந்த நிலையில், தற்போது மேலும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,320 அதிகரித்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.13,900க்கும், ஒரு சவரன் தங்கம் 1,11,200 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிலோவுக்கு ஒரே நாளில் 22 ஆயிரம் ரூபாய் உயர்ந்துள்ளது.


