#BREAKING தங்கம் விலை புதிய உச்சம்- சவரன் ரூ.91,000

 
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்!

சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்துள்ளது.

சென்னையில் ஒரே நாளில் 2வது முறையாக தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதாவது ஒரே நாளில் சவரனுக்கு 1,480 ரூபாய் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் தங்கம் விலை 11,385 ரூபாயாக அதிகரித்துள்ளது. ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.91,080ஆக உயர்ந்துள்ளது.

Q

தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.600 உயர்ந்தது. நேற்று முன்தினம் ரூ.89 ஆயிரத்துக்கு விற்பனையான ஒரு சவரன் தங்கம் நேற்று ஒரே நாளில் ரூ.600 உயர்ந்து ரூ.89 ஆயிரத்து 600-க்கு விற்பனையானது. அதன்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.11 ஆயிரத்து 125-ல் இருந்து ரூ.75 உயர்ந்து கிராம் ரூ.11 ஆயிரத்து 200-க்கு விற்பனையானது. இந்நிலையில் இன்று காலை ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.90,400-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.11,300-க்கு விற்பனையானது குறிப்பிடதக்கது.